Sunday, August 30, 2009

எங்கள் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் பற்றிய ஒரு பதிவு!!!!

அன்புடையீர்!

எங்கள் பள்ளியின் இரண்டு ஹீரோக்கள்!!!!!
என்கிற ஒரு பதிவு "நம் தாயின் புன்னகை" வலைப்பூவிலே வந்திருக்கின்றது. சென்று பார்வையிடவும். அறிவிப்பு பலகையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது! நன்றி!

Saturday, February 28, 2009

எங்கள் பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது!!!


எங்க சீனியர் அபிஅப்பா அவர்கள் "நம் தாயின் புன்னகை" வலைப்பதிவில் போட்ட பதிவு இது!

தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு கே. ராஜேந்திரன் M.Sc.,M.Ed., அவர்களுக்கு தமிழக அரசின் 2008 ம் ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது.இவர் கடந்த 28 ஆண்டுகளாக தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் துறை ஆசிரியராகவும் 01-10-2007 முதல் பள்ளியின் தலைமையாசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இவர் மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி LCD Projector திரை மூலம் செயல்முறை கல்வியளித்து மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்ப்பதுடன் ஆண்டுதோறும் ஏ.வி.சி. கல்லூரியின் பேராசிரியர்களை அழைத்து Biology, Micro Biology, Micro Informatics போன்ற துறைகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு செமினார் வகுப்புகளை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. பெரும்பாலான ஆண்டுகளில் 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்திலும் 12-ம் வகுப்பு உயிரியல் பாடத்திலும் 100 சதவீத தேர்ச்சி விழுக்காட்டினை பெறச்செய்தது பாராட்டுக்குரியது.
இவ்வாண்டு மாவட்ட அளிவிலான 116 பள்ளிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சியை மிகச்சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது. மேலும் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கு கொள்ளச் செய்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இவர் சிறந்த இலக்கிய ஆர்வலர். அறிவியலை இலக்கியத்துடன் கலந்து மாணவர்களை நன்னெறிப் படுத்துவதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
மேலும் தொண்டு நிறுவனங்களான Lions New Century Club, Rotary Club மற்றும் சமரச சன்மார்க்க இளைஞர் கழகம் ஆகியவை இவருக்கு ஆசிரியச்செம்மல், அறம் வளர்ச் செம்மல் போன்ற பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது. இன்ட்ராக்ட் கழக பொறுப்பாளராகவும், நாட்டு நலப்பணித்திட்ட உதவித் திட்ட அலுவலராகவும் இருந்து பல சமுதாயத் தொண்டினையும் செய்துள்ளார்.தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற பின்பு முன்னாள் மாணவர் சங்கத்தின் உதவி பெற்று பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்.
இத்துடன் மாணவர்களின் வளர்ச்சியில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு காலம் பாராமல் மிகச்சிறப்பாக பணியாற்றி வரும் இவருக்கு தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது பெருமைக்குரியதாகும்.
Posted by அபி அப்பா at 2/28/2009 11:54:00 AM 0 comments Links

Monday, September 1, 2008

எங்க அண்ணா அபிஅப்பா எங்க பள்ளியை பற்றி போட்ட பதிவுங்க இது!!!

http://dbtrnhss.blogspot.com/2008/08/blog-post_31.html

எங்க சீமாச்சு அண்ணா ஆரம்பிச்ச "நம் தாயின் புன்னகை" பிளாக் இன்னும் தமிழ்மணத்திலே சேரவில்லை! அதுக்காக இது ஒரு விளம்பர பதிவு தான் சகோதர சகோதரிகளே!!!

Tuesday, April 22, 2008

அன்புள்ள அண்ணா, அக்கா...எல்லோருக்கும்!!!

நம் பள்ளியின் நம் சீனியர் அண்ணா, அக்கா எல்லோரும் எந்தெந்த நாட்டிலோ இருக்கீங்க. நீங்க எல்லாம் எங்க எங்க இருக்கீங்கன்னு இந்த பின்னூட்டத்திலோ அல்லது தனி மடலிலோ(dbtrnhss@gmail.com) சொன்னீங்கன்னா எங்க ஜூனியர்ஸ் கிட்ட சொல்லி "இதோ பாருங்கப்பா நம்ம சீனியர்ஸ் எங்கல்லாம் இருக்காங்க, இப்படி நாம நல்லா படிச்சு அவங்களை போல பெரிய ஆளா ஆகி நாம் ஏறி வந்த இந்த ஏணிப்படியை, ஒரு எஸ்கலேட்டர் மாதிரி ஆக்க வாருங்கள்"ன்னு சொல்லி ஊக்குவிப்போம் அண்ணா\அக்கா!!!

அது போல நம்ம ஆசிரியர்கள் பற்றிய உங்கள் கருத்துகளை உங்கள் பதிவுகளிள் பார்த்தோம். சீமாச்சு அண்ணா, மயிலாடுதுறை சிவா அண்ணா, அபிஅப்பா அண்ணா எல்லோரும் எழுதி இருந்தீங்க. மிக்க நன்றி. நாங்க அதை பதிவெடுத்து இந்த வலைப்பூவில் சேர்த்துகலாமா? உங்க அனுமதி வேண்டும். அல்லது நீங்களே தனி மடலில் எழுதினாலும் பிரசுரிக்கலாம். ஒரு பள்ளிக்கான முதல் வலைப்பூ இது என நினைக்கிறோம். ஆகவே மிகவும் பிரபலமான எங்கள் முன்னோடிகளே உங்கள் வலைப்பூக்களில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தால் (ஒரு பதிவின் மூலமாக) மிக்க சந்தோஷப்படுவோம்.

அடுத்த அடுத்த பதிவில் நம் பள்ளியின் உதயம்(100 ஆண்டுகளுக்கு மேல் ஆன விஷயங்கள் கூட) , வளர்ச்சி, மேலும் என்ன செய்யலாம் உலக தரமாக ஆக என்பது பற்றி எல்லாம் நாம் விவாதிக்கலாம். அதற்கு உங்கள் மேலான ஆலோசனையும் தேவை.

இந்த வலைப்பூக்களில் மிகவும் பிரபலமாக கண்மணி டீச்சர், துளசி டீச்சர், இளவஞ்சி சார் போன்ற பிரபல ஆசிரிய பெருமக்களும் இருப்பதாக உணர்கிறோம். உங்கள் ஆலோசனையும் ஆதரவும் கூட எங்களுக்கு தேவை!

நன்றி நன்றி நன்றி!

திஸ்கி: எங்கள் பள்ளி அண்ணா அக்கா மட்டும் அல்ல எல்லா அண்ணா \ அக்காவும் எங்களுக்கு ஆலோசனை தாங்க(திஸ்கி போன்ற வலைப்பூ வார்த்தைகளும் கத்துகிட்டோம்ல)

Sunday, April 13, 2008

தமிழ் அமுதம் பருகுவோம்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

அடி எடுத்து வைக்கிறோம்

உங்களோடு உறவாட
எண்ணங்களைப் பதிவாக்கி
வந்து விட்டோம் வலையுலகம்
வாழ்த்துங்கள்
வரவேற்பு தாருங்கள்
ஊக்கம் அளியுங்கள்
உற்சாகப் படுத்துங்கள்

test:புரவலர்களுக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் நன்றி

நாங்கள் தி.ப.தி.அர.தே.மேனிலைப் பள்ளியின் மாணவர்கள்
எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும்
சீமாச்சு அய்யா அவர்களுக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் பள்ளியின் வளர்ச்சியும் பெருமைகளும் உலகம் முழுதும் அறியும் முகமாகவும் தேமதுரத் தமிழில் எம் மாணவச் செல்வங்களின் படைப்புகள் அரங்கேறவும் இந்த வலைப் பதிவை தொடங்கியுள்ளோம்.
மாதா பிதா குரு தெய்வம்.எங்களை வழி நடத்தும் ஆசிரியர்களின் துணையோடு செயல்படுவோம்.
வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.