Tuesday, April 22, 2008

அன்புள்ள அண்ணா, அக்கா...எல்லோருக்கும்!!!

நம் பள்ளியின் நம் சீனியர் அண்ணா, அக்கா எல்லோரும் எந்தெந்த நாட்டிலோ இருக்கீங்க. நீங்க எல்லாம் எங்க எங்க இருக்கீங்கன்னு இந்த பின்னூட்டத்திலோ அல்லது தனி மடலிலோ(dbtrnhss@gmail.com) சொன்னீங்கன்னா எங்க ஜூனியர்ஸ் கிட்ட சொல்லி "இதோ பாருங்கப்பா நம்ம சீனியர்ஸ் எங்கல்லாம் இருக்காங்க, இப்படி நாம நல்லா படிச்சு அவங்களை போல பெரிய ஆளா ஆகி நாம் ஏறி வந்த இந்த ஏணிப்படியை, ஒரு எஸ்கலேட்டர் மாதிரி ஆக்க வாருங்கள்"ன்னு சொல்லி ஊக்குவிப்போம் அண்ணா\அக்கா!!!

அது போல நம்ம ஆசிரியர்கள் பற்றிய உங்கள் கருத்துகளை உங்கள் பதிவுகளிள் பார்த்தோம். சீமாச்சு அண்ணா, மயிலாடுதுறை சிவா அண்ணா, அபிஅப்பா அண்ணா எல்லோரும் எழுதி இருந்தீங்க. மிக்க நன்றி. நாங்க அதை பதிவெடுத்து இந்த வலைப்பூவில் சேர்த்துகலாமா? உங்க அனுமதி வேண்டும். அல்லது நீங்களே தனி மடலில் எழுதினாலும் பிரசுரிக்கலாம். ஒரு பள்ளிக்கான முதல் வலைப்பூ இது என நினைக்கிறோம். ஆகவே மிகவும் பிரபலமான எங்கள் முன்னோடிகளே உங்கள் வலைப்பூக்களில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தால் (ஒரு பதிவின் மூலமாக) மிக்க சந்தோஷப்படுவோம்.

அடுத்த அடுத்த பதிவில் நம் பள்ளியின் உதயம்(100 ஆண்டுகளுக்கு மேல் ஆன விஷயங்கள் கூட) , வளர்ச்சி, மேலும் என்ன செய்யலாம் உலக தரமாக ஆக என்பது பற்றி எல்லாம் நாம் விவாதிக்கலாம். அதற்கு உங்கள் மேலான ஆலோசனையும் தேவை.

இந்த வலைப்பூக்களில் மிகவும் பிரபலமாக கண்மணி டீச்சர், துளசி டீச்சர், இளவஞ்சி சார் போன்ற பிரபல ஆசிரிய பெருமக்களும் இருப்பதாக உணர்கிறோம். உங்கள் ஆலோசனையும் ஆதரவும் கூட எங்களுக்கு தேவை!

நன்றி நன்றி நன்றி!

திஸ்கி: எங்கள் பள்ளி அண்ணா அக்கா மட்டும் அல்ல எல்லா அண்ணா \ அக்காவும் எங்களுக்கு ஆலோசனை தாங்க(திஸ்கி போன்ற வலைப்பூ வார்த்தைகளும் கத்துகிட்டோம்ல)

Sunday, April 13, 2008

தமிழ் அமுதம் பருகுவோம்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

அடி எடுத்து வைக்கிறோம்

உங்களோடு உறவாட
எண்ணங்களைப் பதிவாக்கி
வந்து விட்டோம் வலையுலகம்
வாழ்த்துங்கள்
வரவேற்பு தாருங்கள்
ஊக்கம் அளியுங்கள்
உற்சாகப் படுத்துங்கள்

test:புரவலர்களுக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் நன்றி

நாங்கள் தி.ப.தி.அர.தே.மேனிலைப் பள்ளியின் மாணவர்கள்
எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும்
சீமாச்சு அய்யா அவர்களுக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் பள்ளியின் வளர்ச்சியும் பெருமைகளும் உலகம் முழுதும் அறியும் முகமாகவும் தேமதுரத் தமிழில் எம் மாணவச் செல்வங்களின் படைப்புகள் அரங்கேறவும் இந்த வலைப் பதிவை தொடங்கியுள்ளோம்.
மாதா பிதா குரு தெய்வம்.எங்களை வழி நடத்தும் ஆசிரியர்களின் துணையோடு செயல்படுவோம்.
வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.